அரசியல்உள்நாடுபிராந்தியம்

வெள்ள அபாயத்தை தடுக்க அடை மழையில் களத்தில் இறங்கிய அக்கரைப்பற்று முதல்வர் அதாஉல்லாஹ்

நாட்டில் பரவலாக பெய்து வரும் அடைமழை காரணமாக வெள்ள அபாயம் எழுந்துள்ளது.

இதனை கவனத்தில் கொண்டு அக்கரைப்பற்று மாநகர சபை எல்லைக்குள் இருக்கும் பிரதான வடிச்சல் வாய்க்கால்கள் அனைத்திலும் நீர் வழிந்தோட முடியாமல் தடைப்பட்டிருக்கும் தடைகளை அக்கரைப்பற்று மாநகர முதல்வர் ஏ.எல்.எம் அதாஉல்லாஹ் அவர்களினால் நேரடியாக கண்காணிக்கப்பட்டு தடைகள் நீக்கப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டது.

அதன் அடிப்படையில் அக்கரைப்பற்று பலாஹ் வட்டார எல்லைக்குள் இருக்கும் அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியின் பின்னால் இருக்கும் நண்டுக்குழி வாய்க்காலும் மோட்டுவெளி வாய்க்காலும் இணையும் சந்தியில் ஏற்கனவே பதிக்கப்பட்டிருக்கும் குழாய்களுக்கு மேலதிகமாக புதிய வடிச்சல் குழாய்கள் பதிப்பதற்கான ஏற்பாடும் முதல்வர் ஏ.எல்.எம் அதாவுல்லா அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அடை மழை என்றும் பாராமல் மோட்டு வெளி வாய்க்கால், முஸ்லிம் மத்திய கல்லூரி மைதானத்தின் ஊடாக செல்லுகின்ற வடிச்சல் கான் அதே போன்று பலாஹ் வட்டாரத்தின் அனைத்து வடிச்சல்களையும் மேயர் பார்வையிட்டதுடன் அக்கறைப்பற்றில் அதிக மழை பெய்திருந்தாலும் முதல்வரின் விரைவான இச் செயற்பாடுகளால் மிகவும் குறுகிய நேரத்துக்குள் நீர் வடிந்தோடியது

இதேபோன்று ஊரின் அனைத்து பகுதிகளிலும் காலை முதல் இரவு வரை மழை என்றும் பாராமல் தொடர்ச்சியாக இயங்கிய தேசிய காங்கிரஸின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான தற்போதைய அக்கரைப்பற்று மாநகர முதல்வர் ஏ எல் எம் .அதாஉல்லாஹ் அவர்களுக்கும் நீர்ப்பாசன பொறியியலாளர் எஸ்.சுகிதரன், மாநகர சபை உறுப்பினர்கள் இணைந்து செயல்பட்டனர்.

-நூருல் ஹுதா உமர்

Related posts

விமான விபத்து தொடர்பில் நீதிமன்றுக்கு விளக்கமளிக்குமாறு உத்தரவு

தேர்தலுக்கு தமிழ் கட்சிகளின் ஆதரவே பெரும் காரணியாகும்!

4பேர் கொண்டவர்கள் வற் வரி எவ்வளவு செலுத்த வேண்டுமென தெரியுமா?