உள்நாடு

வெள்ளைப்பூண்டு விவகாரம் : வர்த்தகரின் மகன் கைது

(UTV | கொழும்பு) – லங்கா சதொச நிறுவனத்தில் இடம்பெற்ற வெள்ளைப்பூண்டு மோசடி தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

சதொச நிறுவனத்திடமிருந்து வெள்ளைபூண்டு கொள்கலன்களை மோசடியான முறையில் கொள்வனவு செய்ததாக கூறப்படும் வர்த்தகரின் மகன் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் பம்பலப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய நபர் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சுமார் 11,719,520 ரூபா மோசடி செய்தமை, போலி ஆவணங்களை தயாரித்தமை மற்றும் சட்டவிரோதமாக கொள்வனவு செய்யப்பட்ட பொருட்களை வைத்திருக்க ஆதரவளித்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து சந்தேகநபர் இன்று (23) வத்தளை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

   

Related posts

இறுதியிலேயே மஹிந்தவிடம் வாக்குமூலம்

30/1 என்ற பிரேரணைக்கான அனுசரணையிலிருந்து இலங்கை விலகிக் கொண்டுள்ளது

தென்னை மரங்களை வெட்டுவதற்கு அனுமதி அவசியம்

editor