உள்நாடுசூடான செய்திகள் 1

வெள்ளைச்சீனி, பருப்பு, கோதுமை மாவின் விலைகள் குறைவடைகின்றன

இறக்குமதி செய்யப்படும் வெள்ளைச் சீனி, பருப்பு மற்றும் கோதுமை மாவின் மொத்த விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, ஒரு கிலோ வெள்ளைச் சீனியின் மொத்த விலை 300 ரூபாயிலிருந்து 265 ரூபாவாகவும்,

ஒரு கிலோ கோதுமை மாவின் மொத்த விலை 190 ரூபாவிலிருந்து 175 ரூபாவாகவும்,

பருப்பு கிலோ ஒன்றின் மொத்த விலை 350 ரூபாயிலிருந்து 285 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

தற்போது தங்களிடம் போதியளவு வெள்ளைச் சீனி, கோதுமை மாவு மற்றும் பருப்பு கையிருப்பு உள்ளதாகவும்,

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் நுகர்வோர் இந்த அத்தியாவசிய உணவுப் பொருட்களை தடையின்றி வாங்க முடியும் என்றும் இறக்குமதியாளர்கள் தெரிவித்தனர்.

Related posts

கலப்பு முறையின் கீழ் தேர்தலை நடத்துவது பற்றிய கலந்துரையாடல்

நூறு மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் இரத்தினபுரி புதிய நகர பூங்கா!

editor

முச்சக்கர வண்டிகளுக்கு கட்டண அறவீட்டு மீட்டர் அடுத்த மாதம் முதல் நடைமுறையில்