விளையாட்டு

வெள்ளியன்று மைதானத்தில் மஞ்சள் நிற ஆடை அணிந்து ஆஸி அணிக்கு நன்றி செலுத்துவோம்

(UTV | கொழும்பு) – கொழும்பு, கெத்தாராம மைதானத்தில் நாளை (24) நடைபெறவுள்ள இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய நாடுகளுக்கும் இடையிலான இறுதி ஒருநாள் போட்டியைக் காண வரும் அனைத்து இலங்கையர்களும் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து வருமாறு இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியிலும் அவுஸ்திரேலியா அணி இலங்கைக்கு வந்தமைக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக இவ்வாறு மஞ்சள் ஆடையுமாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த திட்டத்திற்கு தற்போது சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

கடுமையான பொருளாதார, அரசியல் மற்றும் சமூக ஸ்திரமற்ற நிலையிலேயே அவுஸ்திரேலிய அணி இலங்கையை வந்தடைந்தது.

நாட்டில் நிலவும் பல்வேறு முரண்பாடுகள் மற்றும் அரசியல் ஸ்திரமின்மை காரணமாக அவுஸ்திரேலிய அணி இலங்கை விஜயத்தை மீள்பரிசீலனை செய்ய வேண்டுமென பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

எனினும், அந்தக் கருத்துக்கள் அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு அவுஸ்திரேலிய அணியிளர் இலங்கைக்கு வர முடிவு செய்தனர்.

உலகின் முன்னணி கிரிக்கட் அணிகளில் ஒன்றான அவுஸ்திரேலியாவின் இந்த முடிவு சிலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இலங்கைக்கான தமது விஜயம் ஆபத்தானது என சில நாடுகள் அறிவித்துள்ளன.

இலங்கை கடுமையான டொலர் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இவ்வேளையில் அவர்கள் டொலரை மட்டும் கொண்டுவராமல் இலங்கைக்கு அனைவரது உதவியும் தேவைப்படும் தருணம் இது என்பதை மீண்டும் உலகிற்கு சுட்டிக்காட்டினர்.

மேலும், இந்த போட்டியின் போது இலங்கை அணியின் நிலைப்பாடும் விசேடமானது.

பலம் வாய்ந்த அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இன்னும் ஒரு போட்டி மீதமுள்ள நிலையில் இலங்கை அணி கைப்பற்றியது.

Related posts

ஆட்ட நிர்ணய சதி 2011 – ஆதாரங்கள் வழங்கப்படவில்லை – ஐசிசி

ஐ.பி.எல் போட்டிகள் ஒத்திவைப்பு

COLIN MUNRO ஆட்டம் நிறைவுக்கு