உள்நாடு

வெள்ளவத்தையில் துப்பாக்கிச் சூடு!

வெள்ளவத்தை இராமகிருஸ்ணா மாவத்தை பகுதியில் இன்று காலை துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் உள்ள விருந்தகம் ஒன்றில் இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இனந்தெரியாத இருவர் குறித்த துப்பாக்கி பிரயோகத்தை நடத்தியுள்ளனர். எவ்வாறாயினும் இந்த துப்பாக்கிச்சூட்டில் எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்பதுடன், விருந்தகத்திற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

திட்டமிட்டபடி பயண கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்

பொலிஸ் திணைக்களத்திற்கு பத்தாயிரம் பேரை இணைக்கத் தீர்மானம்

மைத்திரிபால சிறிசேன மற்றும் பலருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 12 அடிப்படை உரிமை மனுக்கள் செப்டெம்பரில்..!