உள்நாடு

வெள்ளவத்தையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் பலி

(UTVNEWS | கொழும்பு) -கொழும்பு, வெள்ளவத்தை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற கொலை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 

இரு நபர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில்ஒருவர் மற்றொருவரை கத்தியால் குத்தியுள்ளார்.

இதன் பின்னர் காயமடைந்த குறித்த நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் வெள்ளவத்தை ஸ்வர்ணா வீதியில் வசிக்கும் 34 வயதுடைய நபர் ஆவார்.

இச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைதுசெய்துள்ள பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

Related posts

பல்கலைக்கழக மாணவர்கள் குழு மீது பொலிஸார் கண்ணீர்ப்புகைத் தாக்குதல்

ஆட்சியை வீழ்த்துவோம் என்பது ஒரு கனவு மட்டுமே, அது நடக்காது – ஜனாதிபதி அநுர

editor

கட்டுப்பாட்டை இழந்து வேன் விபத்தில் சிக்கியது – கணவன், மனைவி பலி

editor