வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட கொழும்பு, வெள்ளம்பிட்டிய பிரதேச மக்களுக்களுக்கு தேவையாக இருந்த அத்தியவசிய நிவாரண பொதி அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.
இதன் போது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரும் சிரேஷ்ட சட்டத்ரணியுமான றுஸ்டி ஹபீப், கொலன்னாவ பிரதேச அமைப்பாளர் றிஸ்மி ஹனீபா, தெஹிவளை பிரதேச அமைப்பாளர் றிஸ்வான், கட்சியின் முன்னாள் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் மர்ஹூம் பாயிஸ் செயயற்பாட்டாளர்கள், அலி, ஹஸன், றிஷாட், முஸம்மில் உள்ளிட்டோருடன் ஊர் பிரமுகர்கள், கட்சி முக்கியஸ்தர்கள் என பலரும் இதன்போது கலந்துகொண்டனர்.
-ஊடகப்பிரிவு
