வகைப்படுத்தப்படாத

வெளிவிகார அமைச்சர் அந்த பதவியில் இருந்து விலக வேண்டும் – வாசுதேவ

(UDHAYAM, COLOMBO) – வெளிவிகார அமைச்சர் அந்த பதவியில் இருந்து விலக வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார கோரியுள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

நாட்டை அடிபணிய செய்யும் ஒரு சில உடன்படிக்கைகளில் வெளிவிவகார அமைச்சர் கைச்சாத்திடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இங்கு வந்து அவ்வாறு எந்த உடன்படிக்கைகளிலும் கைச்சாத்திடவில்லை என கூறுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெளிவிவகார அமைச்சரின் செயற்பாடுகளுக்கு அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டும்.

அந்த பதவியில் இருந்து அவர் விலக்கப்பட வேண்டும்.

இந்தநிலையில் அவரால் கைச்சாத்தான சகல உடன்படிக்கைகளும் ரத்து செய்யப்படுட வேண்டும் என்றும் வாசுதேவ நாணயக்கார வலியுறுத்தியுள்ளார்.

Related posts

அலரிமாளிகையில் சசுநோதய

Wellampitiya factory employee re-remanded

ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு புதிய சட்டம் அறிமுகம்?