உள்நாடுசூடான செய்திகள் 1வணிகம்

வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு கட்டாய வரி

(UTV | கொழும்பு) – இலங்கையில் உள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கட்டாய வரி செலுத்த வேண்டுமென உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அறிவிப்பின் படி, மேலதிக தனிநபர் வருமான வரி இந்த ஆண்டின் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நிறுவனத்தின் உரிமையாளர்கள் ஊழியர்களின் ஊதியத்தில் இருந்து மேலதிக தனிநபர் வருமான வரியை அறவிட்டு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு செலுத்த வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, குடியுரிமை சட்டத்தின் அடிப்படையில் இலங்கை பிரஜைகள் என்பது இலங்கை குடியுரிமை மற்றும் இரட்டைக் குடியுரிமையை வைத்துள்ள எந்தவொரு நபரும் உள்ளடக்கப்படுவதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இலங்கை குடியுரிமை அற்ற ஊழியர்களுக்கு அவர்களின் அனுமதி இன்றி ஊதியத்தில் இருந்து தனிநபர் வருமான வரி அறவிடுவது கட்டாயமென உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Related posts

இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு ஆட்கடத்தல் – முக்கிய நபர் கைது.

அனைத்து இன மக்களும் ஒன்றாக செயற்பட்டால் இலங்கையை உலகில் மிளிர வைக்க முடியும் – சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன

editor

இன்றும் மழை பெய்யும்

editor