உள்நாடு

வெளிநாட்டவர்கள் ஐவர் கைது

(UTV|COLOMBO) – வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த 5 வெளிநாட்டவர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.

ஹிக்கடுவ-மில்லகொடவத்த பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த 2 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், கல்கிஸ்ஸ நகரில் உள்ள சுற்றுலா விடுதியொன்றிலிருந்து கட்டார் பிரஜை ஒருவரையும் தாய்லாந்து பெண் ஒருவரையும், தெஹிவளை பகுதியில் வீசா இன்றி தங்கியிருந்த நைஜீரியா பிரஜை ஒருவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்

Related posts

துமிந்தவுக்கு பொதுமன்னிப்பு வழங்கிய கோட்டாவுக்கு ஆப்பு? ஹிருனிக்காவின் திட்டம்

நேற்று கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் விபரம்

´சிட்டி பஸ்´ அமுலுக்கு