உள்நாடு

வெலிமிட்டியாவே குசலதம்ம தேரருக்கு அரச அனுசரணையில் இறுதி சடங்கு

(UTV | கொழும்பு) – களனி பல்கலைக்கழகத்தின் உபவேந்தரும் கொழும்பு மற்றும் சிலாபம் ஆகிய மாவட்ட நீதிமன்றங்களின் சங்கசபைத் தலைவரும், பேலியகொட வித்தியாலங்கார பிரிவெனாவின் தலைவருமான, அக்கமஹா பண்டிதர் கலாநிதி அதி . வணக்கத்துக்குரிய வெலிமிட்டியாவே குசலதம்ம தேரரின் இறுதி சடங்கை, பூரண அரச அனுசரணையுடன் நடத்துமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.

உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு மற்றும் புத்தசாசன அமைச்சு ஆகியவற்றின் செயலாளர்களைத் தொடர்புகொண்டுள்ள ஜனாதிபதி, தேரரின் இறுதி சடங்கை பூரண அரச அனுசரணையுடன் நடத்துமாறு ஆலோசனை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

BREAKING NEWS – தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவ விளக்கமறியலில்

editor

வழங்குவதாக கூறிய உர மானியத்தை ஏன் முறையாக வழங்கவில்லை ? எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி

editor

10 புதிய ஜனாதிபதி சட்டத்தரணிகள் நியமனம்!