உள்நாடு

வெலிக்கடை கைதிகளின் எதிர்ப்பு நடவடிக்கை தொடர்கிறது

(UTV | கொழும்பு) –   வெலிக்கடை சிறைச்சாலையில் கைதிகள் சிலர் ஆரம்பித்த எதிர்ப்பு நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதுவரை சுமார் 10 கைதிகள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

தமது தண்டனையை குறைக்குமாறு கோரி சிறைச்சாலை கூரை மீதேறி கைதிகளால் எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் கூறியுள்ளது.

எவ்வாறாயினும், கைதிகளின் கோரிக்கைக்கு சாதகமான தீர்வை வழங்க தமது திணைக்களத்திற்கு இயலாதென சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அவர்களின் கோரிக்கைகள் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் நீதி அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Related posts

போதைப்பொருள் பாவனையை தடுக்கும் விழிப்புணர்வு செயற்திட்டம்!

கஞ்சா ஏற்றுமதி குறித்து மற்றுமொரு தகவல் …

BOI இன் கீழ் உள்ள நிறுவனங்களின் தலைவர்களுக்கு விசா சலுகைகள்