உள்நாடு

வெப்பமான வானிலை குறித்து எச்சரிக்கை – போதுமான அளவு தண்ணீர் அருந்துங்கள்

வெப்பமான வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நாளைய தினம் (03) கிழக்கு மாகாணத்திலும், பொலன்னறுவை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் உள்ள சில பகுதிகளில் வெப்பச் சுட்டியானது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய மட்டத்தில் நிலவக்கூடும் என அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, போதுமான அளவு தண்ணீர் அருந்துமாறும், நிழலான இடங்களில் முடிந்தவரை ஓய்வெடுக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

Related posts

தர நிர்ணயம் மற்றும் உற்பத்திதிறன் தேசிய சம்மேளனத்தின் 04 தங்கப் பதக்க விருதுகளை வென்றுள்ள Cap Snap Lanka

editor

மின்சாரத்தை இறக்குமதி செய்வதற்கான முன்மொழிவு

தூரப் பிரதேசங்களுக்கான ரயில் சேவைகள் வெள்ளியன்று