உள்நாடுவிசேட செய்திகள்

வெனிசுலாவின் நிலைமை குறித்த இலங்கையின் அறிக்கை!

வெனிசுலாவின் சமீபத்திய நிலைமைகள் குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ள இலங்கை அரசாங்கம், சூழ்நிலையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.

பலப் பிரயோகத்தை தடை செய்தல், தலையிடாமை, சர்வதேச மோதல்களை அமைதியான முறையில் தீர்த்து வைத்தல் அரசுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு போன்ற சர்வதேச சட்டம் மற்றும் ஐ.நா. சாசனத்தின் கொள்கைகளை மதிக்க வேண்டியதன் அவசியத்தை இலங்கை வலியுறுத்துகிறது.

வெனிசுலா மக்களின் பாதுகாப்பு நல்வாழ்வு மற்றும் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கு இலங்கை மிகுந்த முக்கியத்துவம் அளிப்பதுடன், பதற்றத்தைக் குறைத்தல் மற்றும் பேச்சுவார்த்தைகள் மூலம் அமைதியான தீர்வுக்கு முன்னுரிமை அளிக்க அனைத்து தரப்பினரையும் அழைக்கிறது.

இந்த முக்கியமான கட்டத்தில், ஐக்கிய நாடுகள் சபையும், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் போன்ற அதன் அமைப்புகளும் இவ்விவகாரத்தை கையாண்டு, வெனிசுலா மக்களின் பாதுகாப்பு, நல்வாழ்வு மற்றும் இறையாண்மை உரிமைகளைக் கருத்தில் கொண்டு அமைதியாtன தீர்வை நோக்கிச் செயற்படுவது அவசியமாகிறது.
 
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு
மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு
கொழும்பு

Related posts

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக்க காலமானார்

நான்கு அமைச்சு செயலாளர்களின் நியமனங்கள் – பாராளுமன்ற உயர் பதவிகள் குழு அனுமதி

editor

தேசிய பேரவையிலிருந்து ஜீவன் தொண்டமான் விலகல்