உள்நாடு

வெட்டுக்கிளிகளை தொடர்ந்து வண்ணத்தி பூச்சிகள்

(UTV | பொலன்னறுவை) – கடந்த சில தினங்களாக பொலன்னறுவை மாவட்டத்தின் மெதிரிகிரிய மற்றும் லங்காபுர ஆகிய பிரதேசங்களில் உள்ள சில கிராமங்களில் மின் கம்பங்கள் மற்றும் தென்னை மரங்களில் ஒரு வகை கறுப்பு நிற வண்ணத்துப்பூச்சிகளை அதிகளவில் காண முடிவதாக குறித்த பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

மெதிரிகிரிய பிசோபங்கடா, அமுனுகம மற்றும் லங்காபுர பிரதேசத்தின் வீரபுர, வீர உதார கம ஆகிய பகுதிகளில் குறித்த இந்த வண்ணத்துப்பூசிகளை காணக்கூடியதாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மின் கம்பங்கள் மற்றும் தென்னை மரங்களில் தங்கியிருக்கும் இந்த பூச்சிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பிரதேசவாசிகள் கூறுகின்றனர்.

பிரதேசத்தில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களுக்கு இந்த பூச்சிகளால் பாதிப்பு ஏற்படுமா என்பதை ஆராய்ந்து பார்க்குமாறு பிரதேசவாசிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

“நீங்கள் வீதியில் போராடும் ஒவ்வொரு விநாடியும் நாட்டிற்கு டொலர் கிடைக்கும் சந்தர்ப்பம் நழுவுகிறது”

ஊரடங்கு சட்டத்தினை நீடிக்க இதுவரையில் தீர்மானமில்லை

லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிப்பு? வெள்ளிக்கிழமை அறிவிப்பு