கிசு கிசுசூடான செய்திகள் 1

வெடிப்புச் சம்பவம் தொடர்பில் நான் அறிந்திருக்கவில்லை-பிரதமர்

(UTV|COLOMBO) பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிபிசி செய்திச் சேவையிடம் நேற்று நேர்காணலில் கலந்துக்கொண்டிருந்தார்.

அதன்போது, குறித்த தாக்குதல் தொடர்பில் அறிந்திருந்தீர்களா என பிபிசி செய்தியாளர் பிரதமரிடம் வினவியிருந்தார்.

இதற்கு பதிலளித்த பிரதமர் , குறித்த தாக்குதல் தொடர்பில் அறிந்திருக்கவில்லை என கூறியிருந்தார்.

புலனாய்வுப்பிரிவு தகவல்கள் அறிக்கையில் உள்ள நிலையில் அது தொடர்பில் அறிந்திராமை தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

புலனாய்வுப் பிரிவு அதனை பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பியிருந்ததாகவும் , அங்கிருந்து குறித்த தகவல்கள் காவற்துறைக்கு வழங்கப்பட்டிருந்ததாகவும் பிரதமர் அதற்கு பதில் வழங்கியிருந்தார்.

இதன்போது , வௌிநாட்டு சுற்றுலாப்பயணிகளுக்கு இலங்கை பாதுகாப்பானதா என செய்தியாளர் வினவியிருந்த நிலையில் , அதற்கு பதில் வழங்கிய பிரதமர் , அரசாங்கம் ஏதேனும் ஒரு பதிலை வழங்கியுள்ளதாகவும் , இந்நாட்டிற்கு சுற்றுலாப்பயணத்தை மேற்கொள்வது தொடர்பில் அவர்களே தீர்மானிக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

 

 

 

Related posts

லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பெல்பிடவின் மனு மார்ச் 08ம் திகதி விசாரணைக்கு

ஆபிரிக்க நாடுகளிலிருந்து 289 பேர் நாடு திரும்பினர்

போதைப்பொருள் ஒழிப்பு வாரம் இன்று ஆரம்பம்