உலகம்

வீதி தாழிறங்கியமையால் 6 பேர் பலி

(UTV | சீனா) – வடமேற்கு சீனாவின் கிங்காய் மாகாணத்தில் திடீரென வீதி தாழிறங்கியமையால் பேரூந்து ஒன்று விபத்துக்குள்ளாகி 10 பேர் காணாமல் போயுள்ளதுடன் 15 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நேற்று(13) மாலை கிங்காய் மாகாண தலைநகரான சாண்டியில் வீதி தாழிறங்கி இடிந்து விழுந்து பிளவு எற்பட்டுள்ளது.

குறித்த பேரூந்து இடிபாட்டுக்குள் இருந்து மீட்கப்பட்டுள்ளதுடன் காணமல் போனவர்களில் 06 பேர் இன்று(14) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், காணாமல் போனவர்களை தேடும்பணி தொடர்வதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts

மத்திய கிழக்கில் யுத்தம் தவிர்க்க முடியாதபடி விரிவடையும் – ஈரான் எச்சரிக்கை.

காசா – இஸ்ரேல் இடையே தினசரி 10 மணி நேரம் போர் நிறுத்தம் – மனிதாபிமான உதவிகளை விநியோகிக்க நடவடிக்கை

editor

ஆப்கான் கல்விக் கூடத்தில் குண்டு தாக்குதல் – 18 பேர் உயிரிழப்பு