உள்நாடு

வீதி ஒழுங்கு விதி மீறல்: தண்டப்பணம் செலுத்தும் காலம் நீடிப்பு

(UTV| கொழும்பு) –போக்குவரத்து விதிமீறல் தொடர்பான தண்டப்பணத்தை (Spot Fine) எந்தவித மேலதிக தண்டப்பண அறவீடும் இன்றி மே மாதம் 02ஆம் திகதி வரை செலுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சலுகை 2020 மார்ச் மாதம் 01ஆம் திகதி அல்லது அதன் பின்னர் வழங்கப்பட்டுள்ள போக்குவரத்து விதிமீறல் தொடர்பான தண்டப்பணத்திற்கு மாத்திரம் ஆகும்.

பொலிஸ் மாஅதிபரின் இணக்கப்பாட்டின் கீழ், இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை, அத்துடன், தற்போது ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் மாவட்டங்கள் தொடர்பான சலுகைக் காலமானது, அம்மாவட்டங்களில் தபாலகம் மற்றும் உப தபாலகங்கள் திறக்கப்பட்ட பின்னர் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

9 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை

editor

நிற்கும் பக்கத்தை ஜெயிக்க வைப்பதே உண்மையான வீரம் – அமைச்சர் ஜீவன் தொண்டமான்

editor

வீடியோ | அவசரகால சட்டவிதிமுறைகளினால் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளார் ரணில் – உயர் நீதிமன்றம் தீர்ப்பு

editor