உள்நாடுபிராந்தியம்

வீட்டுக்குள் புகுந்து பெண்ணின் கழுத்தை நெரித்துக் கொலை – மூவர் கைது

கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் நேற்று (27) தலத்துஓயா பகுதியில் மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

தலத்துஓயா, உடுதெனிய பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்குள் புகுந்து, 70 வயதுடைய பெண் ஒருவரின் கழுத்தை நெரித்துக் கொலை செய்து, வீட்டில் இருந்த சொத்துக்கள் மற்றும் தங்க நகைகளை கொள்ளையடித்த சம்பவம் தொடர்பான விசாரணையின் போது இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் 34, 36 மற்றும் 41 வயதுடையவர்கள் என்றும், மடவல மற்றும் அக்குறணை பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

சந்தேக நபர்களிடம் மேலும் விசாரித்தபோது, ​​கொள்ளையிடப்பட்ட தங்க நகைகளில் சில உக்குவெலவில் உள்ள தங்கம் வாங்கும் நிலையத்துக்கு விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்தது.

சம்பவம் தொடர்பில் தலத்துஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Related posts

பேரூந்துகளில் ஆசன எண்ணிக்கைக்கு ஏற்பவே பயணிகள்

ருமேனியாவில் உள்ள இலங்கையர்கள் ஐவருக்கு கொரோனா

ஹப்புத்தளை விமான விபத்து தொடர்பில் ஆராய இரசாயன பகுப்பாய்வு குழு