வகைப்படுத்தப்படாத

வீடு தீப்பிடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 சிறுவர்கள் பலி

(UTV|CANADA) கனடாவின் ஹலிபக்ஸ் (Halifax) நகரிலுள்ள வீடு ஒன்றில் பரவிய தீயில் சிக்கி 7 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சிறுவர்கள் 7 பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என நம்பப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று ஏற்பட்ட இந்தத் தீ விபத்தில் சிக்கி மேலும் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் காயமடைந்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த குடும்பத்தினர் தொடர்பில் எந்த அடையாளமும் கிடைக்கவில்லை எனப் பொலிஸார் கூறுகின்ற நிலையில், சிரியாவைச் சேர்ந்த குடும்பமே இவ்வாறு குறித்த வீட்டில் தங்கியிருந்ததாக, CBC செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

 

 

 

 

Related posts

பிரபல இயற்பியலாளர் ஸ்டீஃபன் ஹோக்கிங் மரணம்

සංචාරකයින්ගේ පැමිණීමේ වර්ධනයක්

පරිභෝජනයට නුසුදුසු කසල තේ තොගයක් සොයා ගැනේ