அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்வீடியோ

வீடியோ | முன்னாள் ஜனாதிபதி ரணிலின் கைது இலங்கையின் அரசியல் திசையை மாற்றும் – திலித் ஜயவீர எம்.பி

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சிறைவாசம் இலங்கையின் அரசியல் திசையை வேறு திசையில் கொண்டு செல்லும் ஒரு சம்பவம் என்று பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.

இன்று (23) மதியம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சிறையில் சந்தித்துவிட்டு திரும்பிய பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“அவர் கிரிக்கெட் விளையாடச் சென்றார், ஆனால் இந்த அரசாங்கம் எல்லே விளையாடுகிறது. பந்தால் உம்பில் அடித்துவிட்டு அவுட் என்கின்றனர்.

எனது அரசியல் வாசிப்பின்படி, இது நமது நாட்டை அரசியலில் ஒரு புதிய திசைக்கு அழைத்துச் செல்லும் ஒரு சம்பவமாக இருக்கும்.

ரணில் விக்ரமசிங்கவின் அரசியலை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஆனால் இந்த நாட்டின் ஒரு ஜனாதிபதிக்கு இவ்வாறு செய்வது தவறு. நீதிமன்றம் செய்தது சரியா? தவறா? என்று நான் கூறவரவில்லலை.

நீதிமன்ற செயற்பாடுகளுக்கு முன்னர் செய்யப்பட்டுள்ள அந்த விசாரணையின் விதம் நமது நாட்டின் பிம்பத்திற்கு நல்ல படத்தை வரையவில்லை” என்றார்.

வீடியோ

Related posts

நாளைய தினம் மின்வெட்டு இல்லை

editor

பொதுமக்களால் பலமுறை நிராகரிக்கப்பட்ட ரணில் அரசியலில் இருந்து விடைபெறுகின்றார் இல்லை – பிரதமர் ஹரிணி

editor

அரச வெசாக் விழா ஜனாதிபதியின் பங்கேற்புடன் ஆரம்பம்

editor