அரசியல்உள்நாடுவீடியோ

வீடியோ | பேரிடரால் பாதிக்கப்பட்ட துல்ஹிரிய பிரதேசத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விஜயம்

டித்வா சூறாவளி புயலால் ஏற்பட்ட பேரிடர் நிலைமைக்கு மத்தியில், மகா ஓயா பெருக்கெடுப்பால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு அச்சுறுத்தலை எதிர்கொண்ட துலிஹிரிய பிரதேச மக்களின் பிரச்சினைகளை ஆராய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (09) அப்பிரதேசத்துக்கு விஜயம் செய்தார்.

இடைத்தங்கல் முகாமில் இருந்த மக்கள், தங்கள் வீடுகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் தற்போது மண்சரிவு ஏற்படும் அபாயம் காணப்படுவதனால் தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவரிடம் தெரிவித்தனர்.

துல்ஹிரிய பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவால் அவர்களது குடும்பங்களைச் சேர்ந்த பலர் உயிரிழந்துள்ளனர்.

புதையுண்டு போன அவர்களின் உடல்களை மீட்பதற்குத் தேவையான உதவிகளை அரசாங்கம் உரியவாறு பெற்றுக் கொடுக்காத நிலையை இங்கிருந்தோரின் பேச்சுக்களில் இருந்து அவதானிக்க முடிந்தது.

உயிரிழந்தோரின் உடல்களை தோண்டி எடுத்து, குடும்ப உறுப்பினர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்கான வாய்ப்பைப் பெற்றுத் தருமாறு கூடியிருந்தோர் கோரிக்கை விடுத்தனர்.

அவர்களின் பிரச்சினைகளை ஆராய்ந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இந்தப் பிரச்சினைகள் அனைத்தையும் இடர் முகாமைத்துவ ஆலோசனைக் குழுவில் எடுத்துரைப்பதாக தெரிவித்தார்.

அவ்வாறே, அலவ்வ துல்ஹிரிய விகாரைகளில் அமைந்துள்ள இடைத்தங்கல் முகாம்களில் இருக்கும் மக்களைச் சந்தித்து அவர்களின் பிரச்சினைகள், சுக துக்கங்களைக் கேட்டறிந்த எதிர்க்கட்சித் தலைவர், இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எம்மால் இயலுமான உதவிகளைப் பெற்றுத் தருவேன் என்றும் கூடியிருந்தோர் மத்தியில் உறுதியளித்தார்.

வெள்ளம் மற்றும் மண்சரிவுகள் காரணமாக துல்ஹிரிய பிரதேச மக்களுக்கு பெரும் சொத்து சேதங்கள் நிகழ்ந்துள்ளன.

உயிர் இழப்புகளும் இங்கு நடந்துள்ளன என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.

வீடியோ

Related posts

முற்போக்கு அரசியல் கட்சிகளுடன் இணைந்து புதிய கூட்டணி

தற்போதைய நெருக்கடி 1974ம் ஆண்டு காரணமல்ல – பொன்சேகா

 சொகுசு புகையிரத சேவை விரைவில்..