திருகோணமலை மாவட்டம், ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெருகல் முகத்துவாரம் கடற்கரையில், மரத்தால் தயாரிக்கப்பட்ட மிதப்பு படகு ஒன்று இன்று புதன்கிழமை (14) காலை சுமார் 5.00 மணியளவில் கரையொதுங்கியுள்ளது.
இந்த மிதப்பு படகு மியன்மார் அகதிகள் வந்திருக்கக் கூடிய படகாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
குறித்த படகில் பௌத்த மத அடையாளங்கள் காணப்படுவதுடன், பல்வேறு சித்திரங்களும் வரையப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை, சம்பவ இடத்திற்கு அதிகளவான பொதுமக்கள் வருகை தந்து பார்வையிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
-மூதூர் நிருபர் முஹம்மது ஜிப்ரான்
