அரசியல்உள்நாடுவீடியோ

வீடியோ | கொழும்பு மகாநாமா கல்லூரியில் மூன்று பிள்ளைகள் கடுமையாக துஷ்பிரயோகம் – குற்றவாளிக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துங்கள் – சஜித் பிரேமதாச

சிறார்களின் உரிமைகள் தொடர்பில் பேசும் தருணத்தில், கொழும்பு மகாநாம கல்லூரியில் கற்கும் மூன்று பிள்ளைகளை குறித்த பாடசாலைக்கு பொறுப்பான தலைமைப் பாதுகாப்பு அதிகாரியால் ஒக்டோபர் 4 ஆம் திகதி சனிக்கிழமை கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றன.

துஷ்பிரயோகம் செய்யப்பட்ட பிள்ளைகள் குறித்து அதிபரோ அல்லது ஆசிரியர்களோ எந்தத் தெளிவானதொரு நடவடிக்கைகளையும் இதுவரை எடுக்கவில்லை.

மருத்துவர்களிடம் அனுப்பும் நடவடிக்கையோ, தொடர்புடைய பாதுகாப்பு நிறுவனம் குறித்தோ அல்லது இந்த துஷ்பிரயோகத்தைச் செய்த குற்றவாளிக்கு எதிராகவோ எந்த நடவடிக்கையும் இதுவரையில் எடுக்கப்படவில்லை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (22) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இரு ஆசிரியர்கள் இது தொடர்பில் அதிபரோடு பேசும் போது அதிபர் குறித்த இரு ஆசிரியர்களையும் மிரட்டியுள்ளார்.

இது குறித்து முறைப்பாடு பதிவு செய்ய முற்படும் போது, நீதிமன்றங்கள்தோறும் அழைத்துச் செல்ல வேண்டி வரும் என்றும், பல ஆண்டுகளாக வழக்குகள் இழுத்தடிக்கப்படலாம் என்றும் பெற்றோர்களை பயமுறுத்தியுள்ளார்.

பாடசாலை முன்பாக போராட்டமொன்றை முன்னெடுப்பதற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து முறையான விசாரணையை நடத்தி, குறித்த பிள்ளைகளுக்கு பாதுகாப்பை பெற்றுக் கொடுக்குமாறும், இந்த விடயம் குறித்து ஆராய்ந்து பார்க்குமாறும்
வேண்டுகோள் விடுக்கிறேன்.

இந்தக் குற்றவாளி மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எந்த செல்வாக்குக்கும் அடிபணியாமல் விடயங்களை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

வீடியோ

Related posts

இல்ல விளையாட்டு போட்டியால் உயிரிழந்த வவுனியா முஸ்லிம் பாடசாலை மாணவர்கள்!

சவுதி அரேபியாவில் கட்டுமான வேலைகளுக்கு இலங்கையர்களுக்கு பல வாய்ப்புகள்

‘அரசு அதிகாரிகளைப் பற்றி கவனமாகப் பேசுங்கள்’