காரைதீவு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாவடிப்பள்ளி ஆற்றில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
காயங்களுடன் மீட்கப்பட்டு அடையாளம் காணப்பட்ட இந்தச் சடலம் குறித்து காரைதீவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
53 வயது மதிக்கத்தக்க மட்டக்களப்பு, செங்கலடி பகுதியை சேர்ந்த பாக்கியராசா கிருபாகரன் என்பவரே நேற்று (03) சடலமாக மீட்கப்பட்டார்.
சடலத்தின் கழுத்து மற்றும் தலை தோற்பட்டை உள்ளிட்ட பகுதியில் காயங்கள் காணப்படுவது ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.
மாவடிப்பள்ளி பகுதியில் உள்ள அரிசி ஆலை ஒன்றில் தொழிலாளியாக இருந்ததுடன் நேற்று முதல் காணாமல் போனதாக அரிசி ஆலை உரிமையாளர் பொலிஸாரின் விசாரணையின்போது தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்துக்கு கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸார் சென்று விசாரணைகளை துரிதப்படுத்தமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்தார்.
-பாறுக் ஷிஹான்
வீடியோ