உள்நாடுவீடியோ

வீடியோ | இஸ்ரேலிய சுற்றுலா பயணிகளால் இலங்கைக்கு அச்சுறுத்தல் – நீதிக்கான மய்ய தலைவர் ஷஃபி எச். இஸ்மாயில்

இஸ்ரேலிய சுற்றுலா பயணிகளினால் மேற்கொள்ளப்படும் சட்டவிரோதமான விடயங்களை தடுக்காவிடின் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை நாடு எதிர்கொள்ளும் என நீதிக்கான மய்யத்தின் தலைவர் சட்டமுதுமாணி ஷஃபி எச். இஸ்மாயில் தெரிவித்தார்.

அண்மைக் காலமாக இலங்கையில் இஸ்ரேலிய நாட்டு உல்லாச பிரயாணிகளினால் ஏற்படும் விடயங்கள் குறித்து விசேட செய்தியாளர் சந்திப்பு அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருதுவில் உள்ள அதன் அலுவலகத்தில் இன்று (17) நடைபெற்ற போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது

இன்று இஸ்ரேலிய உல்லாசப்பிரயாணிகளினால் இலங்கைக்கப் பாரிய அச்சுறுத்தல் நிலவி வருகிறது.

அதாவது சபாத் ஹவூஸ் என்ற பெயரில் மதத்தை பரப்புவதற்காக மேற்கொள்ளப்படும் நிர்மாணம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இந்த விடயத்தில் அரசாங்கம் ஒரு மெத்தன போக்கில் உள்ளதை காண முடிகிறது.

எனவே உடனடியாக இந்த விடயத்தில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

-பாறுக் ஷிஹான்

வீடியோ

Related posts

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 581 ஆக உயர்வு

ரம்புக்கனை சம்பவம் : பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும்

டயனா கமகே மீதான தாக்குதல் – ஒழுக்காற்று நடவடிக்கை!