அரசியல்உள்நாடுவீடியோ

வீடியோ | அரசாங்கம் இன்னும் மௌனம் காப்பது ஏன்? எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி

கணக்காய்வுத் திணைக்களத்தின் கூற்றுப்படி, தரமற்ற மருந்துகளை நமது நாட்டிற்குள் கொண்டு வந்து, நம் நாட்டு மக்களுக்கு அவற்றை சட்டவிரோதமாக விற்பனை செய்த மருந்துத் துறையில் ஈடுபட்டுள்ள முக்கிய நபர்களிடமிருந்து மார்ச் 31 ஆம் திதிக்குள் ரூ. 3 பில்லியன் இழப்பீட்டை அறவிட வேண்டி காணப்படுகின்றன.

முறைமையில் மாற்றத்தை கொண்டு வருவோம் என பேசிய தற்போதைய அரசாங்கம், இந்த கீழ்மட்ட மருப்பொருள் கடத்தல்காரர்கள் ஏற்படுத்திய அழிவுக்கு உரிய இழப்பீட்டை ஏன் இன்னும் அறவிடாமல் இருக்கின்றனர் என்பதில் பிரச்சினை காணப்படுகின்றது.

இவ்வளவு பெரிய தொகையை அறவிட வேண்டியிருக்கும் போது அரசாங்கம் ஏன் அறவிடாமல் இருக்கிறது என்பதில் சந்தேகம் நிலவுகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அனுராதபுரம் மாவட்டம், மிஹிந்தலை தேர்தல் தொகுதியில், கட்டுபொத்த கிராமத்தில் இன்று (30) நடைபெற்ற எதிர்க்கட்சித் தலைவரின் நடமாடும் சேவை நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

குருந்துவத்த மற்றும் கொள்ளுப்பிட்டி ஆட்சியாளர்களுக்கு தொலைதூர கிராமங்களில் வாழும் மக்களின் துயரமும் வலியும் புரியவில்லை.

இவர்கள், உறைந்த மேகங்களுக்குள்ளேயே வசதியான வாழ்க்கையை வாழ்கிறார்கள். யதார்த்தைத் புரியாதவர்களாக இருக்கின்றனர்.

இந்த மக்களுக்காக நாங்கள் ஏதாவது செய்யும்போது, ​​நாங்கள் பொருட்களை பகிர்ந்தளிக்கும் அரசியலைச் செய்கிறோம் என்று இத்தரப்பினர் எம்மீது குற்றம் சாட்டுகிறார்கள். இன்று நாட்டில் உள்ளோர் இல்லாதோர் இடைவெளி காணப்படுகின்றன.

இந்த இடைவெளி உயிர்த்த ஞாயிறு தாக்குதல் துயரம், கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் வங்குரோத்து நிலை ஆகியவற்றால் அதிகரித்து காணப்படுகின்றன.

வறுமையை ஆராயும் நிறுவனங்களின்படி, நாட்டின் 50% ஆனோர் ஏழ்மையடைந்துள்ளனர் என சுட்டிக்காட்டுகின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அரசாம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் பூர்த்தியாகிறது. புத்திஜீவிகளும் தொழில் வல்லுநர்களும் இன்னும் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.

நமது நாட்டில் பாரிய அளவிலான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் போது, ​​அவற்றை செய்வதற்கு பொறியாளர்கள் தேவைப்படுகின்றனர்.

ஆனால் நாட்டில் தேவையான பொறியாளர்கள் இல்லை. 1520 பொறியாளர்கள் இருக்க வேண்டும்.

ஆனால் இன்று 670 பொறியாளர்கள் மாத்திரமே காணப்படுகின்றனர். 300 புதிய பொறியாளர்களை விரைவில் சேவையில் இணைத்துக் கொள்ள திட்டமிடப்பட்டிருந்தாலும், இந்தப் பொறியாளர்கள் உட்பட தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.

இத்தரப்பின்ர் நாட்டின் மீது நேர்மறையான பார்வையைக் கொண்டிருந்திருந்தால், இவர்கள் நாட்டை விட்டு வெளியேறியிருக்க மாட்டார்கள்.

ஒரு வருட ஜே.வி.பி அரசாங்கம் சரியானதைச் செய்கிறது என்று அவர்கள் நினைத்தால், அவர்கள் ஏன் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு கேள்வி எழுப்பினார்.

வரலாற்றுப் பாடத்தை நீக்க முடியாது.

கட்டாயப் பாடங்களிலிருந்து வரலாற்று பாடத்தை நீக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. நமது நாட்டில் கல்வி நவீனமயப்படுத்தப்பட வேண்டும். அதில் மாற்றுக் கருத்துக்கள் இல்லை. என்றாலும், அடுத்த தலைமுறை குடிமக்களும் நாட்டின் வரலாறு குறித்த துல்லியமான மற்றும் நல்ல அறிவைப் பெற்றிருக்க வேண்டும்.

எனவே இது கட்டாய பாடமாக அமைந்து காணப்பட வேண்டும். எதிர்க்கட்சி அரசாங்கத்தின் இந்த முடிவை கடுமையாக எதிர்க்கிறது.

ஆங்கிலம், தகவல் தொழில்நுட்பம் போரவே வரலாறு தெரியாத குடிமகன் ஸ்மார்ட் குடிமகனாக இருக்க மாட்டார்.

எனவே வரலாற்றுப் பாடத்திற்கு அதற்குரிய முன்னுரிமை நாம் வழங்க வேண்டும். இதற்காக முடிந்தவரை போராடுவேன் என்று அவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

வீடியோ

Related posts

பாராளுமன்றத் தேர்தலுக்கு இதுவரை கட்டுப்பணம் செலுத்தியோரின் விபரம் வெளியானது

editor

பிரதமரின் திருப்பதி பயணம் குறித்து இலஞ்ச ஆணைக்குழு விசாரணைகள் ஆரம்பம்

பிரதமர் – அமெரிக்க கருவூலத் திணைக்களக் குழுவினர் இடையே கலந்துரையாடல்