வகைப்படுத்தப்படாத

விஷேட டெங்கு ஒழிப்பு நிகழ்வு

(UDHAYAM, COLOMBO) – மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் டெங்கு ஒழிப்பு விஷேட நிகழ்வின் இரண்டாவது நாள் கொழும்பு, மஹவத்த பிரதேச பகுதிகளில் நடைபெற்றது.

நேற்று நடைபெற்ற இந்த நிகழ்வில் 40 குழுக்கள் கலந்து கொண்டனர்.

ஒரு குழுவில் 5 இராணுவ அங்கத்தவர்களும் பொலிஸ் அதிகாரி மற்றும் மக்கள் சுகாதார பரிசோதகர் உள்ளடங்குவார்கள். இதற்கு சமமாக கடுவெல பிலியந்தலை, ஹங்வெல்ல, ஹோமாகம மற்றும் கஹதுடுவ பிரதேசங்களை உள்ளடக்கி இராணுவ அங்கத்தவர்கள் 60 பேர் கலந்து கொண்டனர்.

கடந்த சனிக்கிழமை மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தலைமையில் சுகததாஸ உள்ளரங்க மைதானத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இந்த விஷேட டெங்கு ஒழிப்பு நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த டெங்கு ஒழிப்பு நிகழ்வு எதிர்வரும் 8ம் திகதி சனிக்கிழமை வரை நடைபெறவுள்ளது.

Related posts

மறைந்த பிரம்மானவத்தே சீவலீ தேரர் தமிழ் மக்களின் உள்ளங்களையும் வென்றெடுத்தவர் – பிரதமர்

யாழில் தகவல் அறியும் சட்டம் தொடர்பான செயலமர்வு நாளை

திரிபோஷா எடுத்து வருவதாக கூறி சென்ற இளம் பெண்! வீடு திரும்பவில்லை