உள்நாடுசூடான செய்திகள் 1

விவசாயிகளுக்கு தானியங்களை விநியோகிக்கும் சூழல் உருவாகியுள்ளது

(UTV | கொழும்பு ) – உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு சந்தைகளுக்கு அதிக விலைகளுக்கு விவசாயிகளுக்கு தானியங்களை விநியோகிப்பதற்கான சூழல் உருவாகியுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் நேற்று(03) விவசாயிகளை சந்தித்த போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தினால் தானியங்கள் இறக்குமதி இடைநிறுத்தப்பட்டுள்ளமையினாலேயே இந்த நிலைமை உருவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சோளம்,பயறு,கௌபி மற்றும் குரக்கன் ஆகியவற்றை பயிரிட விவசாயிகள் முன்வர வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் விவசாயிகள் எதிர்நோக்கியுள்ள களஞ்சிய வசதிகள் தொடர்பிலும் இதன் போது ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார்.

Related posts

 கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு பலத்த பாதுகாப்பு வழங்க நடவடிக்கை

11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கின் சந்தேக நபர்களின் விளக்கமறியல் காலம் நீடிப்பு

 சில அத்தியாவசிய பொருட்களின் விலை குறையும்- வர்த்தக அமைச்சர்