2024/2025 பெரும் போகத்தில் நெல், சோளம், பெரிய வெங்காயம், மிளகாய், சோயா மற்றும் உருளைக்கிழங்கு பயிர்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு 1,484 மில்லியன் ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளதாக கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், 87,690 ஏக்கர் நிலத்தில் மேற்படி பயிர்களை சாகுபடி செய்த 74,958 விவசாயிகளுக்கு இந்த இழப்பீடு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வறட்சி, வெள்ளம் மற்றும் வனவிலங்குகளால் ஏற்படும் சேதங்களுக்கு, ஹெக்டேருக்கு அதிகபட்சமாக 100,000 ரூபாய் வரை இழப்பீடு வழங்கப்படுவதாகவும் சபை குறிப்பிட்டுள்ளது.
இலவச பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இந்த இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும், இது விவசாயிகளை அதிகமாக பயிரிட ஊக்குவிக்கும் நோக்கம் கொண்டது என்றும் கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபை தெரிவித்துள்ளது.