வகைப்படுத்தப்படாத

விளையாட்டு மைதானங்களை பராமரிப்பதற்கு அமைச்சரின் வேலைத்திட்டம்

(UTV|COLOMBO)-நாடளாவிய ரீதியாக உள்ள அனைத்து விளையாட்டு மைதானங்களையும் சுகததாச விளையாட்டு அரங்குடன் ஒன்றிணைத்து பராமரிப்பதற்கு வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விளையாட்டுத் துறை அமைச்சின் செலவினங்கள் தொடர்பான விவாதத்தின் போதே அமைச்சர் இந்த விடயத்தை தெரிவித்தார்.

316 பாடசாலைகளில் உள்ள மாணவர்கள் இரண்டு வருட காலத்தில் பலவித விளையாட்டு பயிற்சிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

அந்த வகையில் அனைத்து விளையாட்டரங்குகளையும் சுகததாச விளையாட்டரங்குடன் இணைத்து குழுவொன்றின் மூலமாக பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கு வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அத்துடன், சுகததாச விளையாட்டரங்கை நவீனமயப்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

Related posts

Sir Kim Darroch: UK ambassador to US resigns in Trump leaks row

ஆசிரியர் வெற்றிடங்கள் பூரணப்படுத்தப்படும் – கல்வி அமைச்சர்

Dr. Shafi granted bail [UPDATE]