சம்மாந்துறை பிரதேசத்தில் உள்ள இளைஞர்களின் திறமைகளை ஊக்குவித்து, அவர்களை போதைப்பொருள் பாவனை போன்ற சமூக அபாயங்களிலிருந்து விலக்குவதை குறிக்கோளாக கொண்டு அமைக்கப்பட்ட ஆலையடி வட்டைப் பகுதியில் அமையபெற்ற மைதானம், சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட ஜனாதிபதி விளையாட்டுத் தொகுதியில் உள்ள பெட்மிண்டன் கோர்ட் மற்றும் உடற்பயிற்சி கூடம் (ஜிம்) ஆகியவற்றை இன்று (20) சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஐ.எல்.எம் மாஹிர் நேரில் சென்று பார்வையிட்டார்.
இக்கள விஜயத்தில் தொடர்ந்தும் தனது கருத்தினை தெரிவித்த தவிசாளர் விளையாட்டு துறையை ஊக்குவிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இம்மாதிரியான நடவடிக்கைகள், சம்மாந்துறையின் இளம் தலைமுறையின் முன்னேற்றத்திற்கான முக்கியத்துவமான படியாக காணப்படுகின்றது எனவும்
எமது பிரதேச சபை விளையாட்டு அபிவிருத்திக்காக தொடர்ந்து முழுமையாக செயல்படும் என்பதை உறுதியாக தெரிவித்தார்
இக்கள விஜயத்தில் சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர், பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.ஆர் ஆசிக் அஹமட், எச்.எம். காலித் , எஸ்.எல்.எம். பஹ்மி ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
-ஷாதிர் ஏ ஜப்பார்