விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்களான நிமல் லான்சா மற்றும் ராஜித சேனாரத்ன ஆகியோருக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவுகளை உட்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இருவரின் கோரிக்கைகளுக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜகத் வீரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன எதிர்வரும் 09ஆம் திகதி வரையும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா எதிர்வரும் 12 ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.