வகைப்படுத்தப்படாத

விரைவில் மரணத்தை சந்திக்க போகிறேன்:முன்னாள் போப் பெனடிக்ட்

(UTV|ROME)-உலக கத்தோலிக்க மத தலைவராக (போப்)  ஜெர்மனி நாட்டை 16-ம் பெனடிக்ட் தேர்வு செய்யப்பட்டிருந்தார். ஆனால் சில ஆண்டுகாலம் பணியாற்றிய அவர் 5 ஆண்டுகளுக்கு முன்பு போப் பணியில் இருக்க விரும்பவில்லை என்று அறிவித்து ஓய்வுபெற்றார். இதையடுத்து பிரான்சிஸ் புதிய போப் ஆக தேர்வு செய்யப்பட்டார்.

முன்னாள் போப் பெனடிக்ட் தொடர்ந்து ரோம் நகரில் உள்ள சிறிய மடத்தில் தங்கி இருக்கிறார். அவருக்கு உதவி செய்வதற்காக 4 கன்னியாஸ்திரிகளும், தனி செயலாளர் ஒருவரும் உள்ளனர்.

தற்போது பெனடிக்ட்டுக்கு 91 வயது ஆகிறது. இந்த நிலையில் அவர் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

நான் எனது கடைசி கால வாழ்க்கை எப்படி செல்கிறது என்பதை பலரும் அறிவதற்கு ஆவலாக இருக்கிறார்கள். என்னை சுற்றி எல்லாமே நன்றாக நடந்து கொண்டிருக்கிறது. என்மீது மக்கள் மிகவும் அன்பு காட்டி என்னைப்பற்றி விசாரிப்பது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது.

அதே நேரத்தில் நான் இப்போது 90 வயதை கடந்து விட்டேன். எனது உடல் உள்உறுப்புகள் பணி செய்வதை குறைத்துக் கொண்டுள்ளன. நான் வலிமை குன்றி வருகிறேன். நான் மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறேன். நான் கடவுளின் இல்லத்திற்கு புனித பயணம் செல்வதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

சவுதி உட்பட 4 நாடுகள் , கட்டாருடன் அனைத்து தொடர்புகளையும் துண்டித்தன

Arrest after details of 100 million US individuals stolen

Police investigate death of ten-month old twins