கேளிக்கை

விரைவில் திரிஷாவின் பலமுகங்கள்

(UTV|INDIA)  ஹீரோயின்கள் போட்டி அதிகரித்திருக்கும் நிலையிலும் நயன்தாரா போல் தனது இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார் திரிஷா. பேட்ட படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடித்து இதுநாள் வரை ரஜினியுடன் இணையவில்லை என்ற ஏக்கத்தை போக்கிக் கொண்டார். முன்னதாக 96 படத்தில் ஜானு கதாபாத்திரத்தில் நடித்து இளம் ரசிகர்களை மீண்டும் வளைத்துப்போட்டார்.

அடுத்து ஹீரோயின் சப்ஜெக்ட்டில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். எங்கேயும் எப்போதும் படத்தை இயக்கிய சரவணன் புதிய படம் இயக்குகிறார். இப்படத்திற்கான கதையை ஏ.ஆர்.முருகதாஸ் எழுதி உள்ளார். இதில் அவருக்கு ஜோடி கிடையாது. திரிஷாவின் வித்தியாசமான பலமுகங்கள் இப்படத்தில் வெளிவரும் என்கிறது படத் தரப்பு.

Related posts

பிரபல பாடகர் உலகை விட்டு பிரிந்தார்

ஆந்திராவை சேர்ந்தவருடன் ரகுல் பிரீத்திசிங் காதல்?

சிம்பு இனி படங்களில் நடிக்க கூடாது!