வகைப்படுத்தப்படாத

விரைந்து பரவும் காட்டுத்தீ

(UTV|AMERICA)-அமெரிக்காவின், கலிபோனியா மாநிலத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ மேலும் பல பகுதிகளுக்கு விரைந்து பரவி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த சில நாட்களாக அங்கு பரவிவரும் காட்டுத்தீ காரணமாக இதுவரை 23 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் இடம்பெயந்துள்ளனர்.

காற்றின் வேகம் மற்றும் வெப்பநிலை என்பன தீ விரைந்து பரவுவதற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காட்டுத்தீ காரணமாக பல வீடுகள் உள்ளிட்ட பொது மக்களின் சொத்துக்கள் தீக்கிரையாகியுள்ளன.

 

 

 

Related posts

ஆவா குழுவுடன் தொடர்புடைய இளைஞன் கைது

பாகிஸ்தான் 8 மாணவர்கள் இலங்கை வருகை

துப்பாக்கி தவறுதலாக இயங்கியதால் காவற்துறை அதிகாரி காயம்