(UTV | இந்தியா ) –     கொம்பன் பட இயக்குனர் முத்தையா அவர்களின் இயக்கத்தில் வெளியான விருமன் திரைப்படம் திரையரங்குகளில் 100 நாட்களை கடந்து வெற்றிநடைப்போடுகிறது.
இந்தப்படத்தில் கார்த்திக், அதிதி ஷங்கர், பிரகாஷ் ராஜ், சரண்யா பொன்வண்ணன், ராஜ் கிரண், சூரி ஆகிய நட்சத்திரப்பட்டாளங்களின் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் 12ஆம் திகதி வெளியானது. இப்படத்தின் கதாநாயகன் கார்த்தியின் சகோதரரான சூர்யாவின்2D தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரித்திருந்தது.  யுவன் ஷங்கர் ராஜா அவர்களின் இசையமைப்பில் கிராமிய மண் வாசம் வீசும் கதைப்பாங்கில் வெளிவந்த இப்படம் ரசிகர்கள் அனைவரின் மனதையும் கொள்ளையடித்திருந்தது. இந்நிலையில் தற்போது இத்திரைப்படம் 100 நாட்களை கடந்து திரையரங்குகளில் ஓடி சாதனைப்படைத்திருக்கிறது.
							previous post
						
						
					
							next post
						
						
					
