உள்நாடுபிராந்தியம்

வியட்நாம் நாட்டைச் சேர்ந்த பெண் கடலில் மூழ்கி பலி

கடலில் மூழ்கி வெளிநாட்டுப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் களுத்துறை, அளுத்கமை, மொரகல்ல பகுதியில் இன்று திங்கட்கிழமை (11) இடம்பெற்றுள்ளது.

வியட்நாம் நாட்டைச் சேர்ந்த 48 வயதுடைய பெண் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவத்தன்று, வெளிநாட்டுப் பெண் மேலும் சில நபர்களுடன் இணைந்து மொரகல்ல கடலில் நீராடிக் கொண்டிருந்த போது திடீரென நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

பின்னர், நீரில் மூழ்கி காணாமல் போன வெளிநாட்டுப் பெண்ணின் சடலம் பெந்தர கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

சமூக செயற்பாட்டாளர் கெலும் ஜயசுமனவுக்கு பிணை

editor

தேசமான்ய கந்தையா கென் பாலேந்திரா காலமானார்

editor

குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

editor