விளையாட்டு

விம்பிள்டன் டென்னிஸ் இரத்து

(UTVNEWS | COLOMBO) –கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

போட்டிகளில் மிக உயரியதான 134 ஆவது விம்பிள்டன் டென்னிஸ் தொடர் ஜூன் 29 முதல் ஜூலை 12 ஆம் திகதி வரை லண்டனில் இடம்பெறவிருந்தது.

எனினும் கொரோனா வைரஸ் தொற்று பிரிட்டனில் வேகமாக பரவுவதால் வீரர்கள், ரசிகர்கள் உள்ளிட்டோரின் நலனை கருத்தில் கொண்டு விம்பிள்டன் போட்டிகளை இரத்து செய்வதாக பிரிட்டன் டென்னிஸ் கழகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

Related posts

ஷானகவின் சாதனையினை தன்வசப்படுத்தினார் முஹம்மத் இர்பான்

தென்னாபிரிக்க தொடரில் இருந்து ஆச்சர் நீக்கம்

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்தியா வெற்றி