உலகம்

விமான விபத்தில் 19 பேர் பலி

(UTV |  தன்சானியா) – தன்சானியாவில் உள்ள விக்டோரியா ஏரியில் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியதில் 19 பயணிகள் உயிரிழந்துள்ளனர் என்று பிரதமர் காசிம் மஜலிவா தெரிவித்தார்.

மோசமான வானிலை காரணமாக, குறித்த விமானம் புகோபா நகரில் உள்ள விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது.

விமானத்தில் பயணம் செய்த 26 பேர் மீட்பு குழுவினரால் மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

எவ்வாறாயினும், விமானத்தில் எத்தனை பயணிகள் இருந்தனர் என்பது குறித்து இதுவரையில் குறிப்பிட்ட தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

எல்லை கட்டுப்பாடுகளை தளர்த்தியது அவுஸ்ரேலியா

காற்பந்துப் போட்டி – யுத்தக்களமாக மாறிய மைதானம்.

அஸ்ட்ரா ஜெனகா தொடர்பில் WHO இனது நிலைப்பாடு