அரசியல்உள்நாடு

விமான நிலையத்தில் வழங்கப்படும் வௌிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கான சாரதி அனுமதிப்பத்திர கட்டணத்தை அதிகரிக்க தீர்மானம் – அமைச்சர் விஜித ஹேரத்

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வௌிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு வழங்கப்படும் சாரதி அனுமதிப்பத்திரத்துக்கான கட்டணத்தை 2,000 ரூபாவில் இருந்து 15,000 ரூபாவாக அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் விளக்கமளித்த வௌிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், போக்குவரத்து அமைச்சுடன் கலந்துரையாடிய பின்னர் அதனுடன் தொடர்புடைய வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டதாக தெரிவித்தார்.

இருப்பினும், அந்த அறிவிப்பில் செலுத்த வேண்டிய தொகை அமெரிக்க டொலரில் குறிப்பிடப்பட்டுள்ளதால், அது ரூபாயாக மாற்றப்பட்டு, அடுத்த வாரம் மீண்டும் குறித்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்படும் என்று அமைச்சர் மேலும் கூறினார்.

இந்த வசதி எதிர்காலத்தில் வெளிநாட்டினருக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படாது என்றும், பல ஆண்டுகளுக்குப் பிறகு நாடு திரும்பும் இலங்கையர்களும் பொருத்தமான கட்டணங்களைச் செலுத்துவதன் மூலம் அதைப் பெற முடியும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

“நமது நாட்டிற்கு வரும் வெளிநாட்டினருக்கு மட்டுமல்ல, இலங்கைக்கு வெளியே வசிக்கும் சுமார் 3.5 மில்லியன் இலங்கையர்களுக்கும் போக்குவரத்து அமைச்சு ஒரு முடிவை எடுத்தது.

அவர்களில் பெரும்பாலோர் 10 முதல் 15 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த நாடுகளில் வசித்து வருகின்றனர்.

அவர்கள் இலங்கைக்கு வரும்போது, ​​அவர்களுக்கும் இந்தத் தேவை எழுகிறது.

சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டுமல்ல. நமது தூதரகங்களில் இராஜதந்திரப் பணிகளில் ஈடுபடுபவர்களுக்கும் அந்தத் தேவை உள்ளது.”

முதலீட்டாளர்கள் கொண்டுவரப்படும்போது, ​​புதிய தொழில்கள் தொடங்கப்படும்போது, ​​அந்த நிறுவனங்களில் சேவைகளை வழங்குபவர்களுக்கும் அந்தத் தேவை உள்ளது.

இந்நிலையில் குறித்த சாரதி அனுமதிப்பத்திரத்திற்காக பெறப்படும் தொகையே போதுமானதாக இல்லை.

2000 ரூபாயே தற்போது பெறப்படுகின்றது.

எனவே போக்குவரத்து அமைச்சுடன் கலந்துரையாடி அந்தத் தொகையை அதிகரிக்க ஒரு உடன்பாட்டிற்கு வந்ததாக அவர் குறிப்பிட்டார்.

Related posts

புதிய இராஜதந்திர அதிகாரிகளை நியமிக்க அனுமதி

எனது உள்ளம் தூமையாது உலமாக்கள் முன் நிலையில் ரிஷாட் பதியுதீன்

editor

நாட்டில் நிரந்தர வரிக் கொள்கை இன்மையால் கைத்தொழிலாளர்கள் பாதிப்பு!