உள்நாடு

விமான நிலையத்தின் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதான இந்திய பிரஜை

84.96 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 32 வயதான இந்தியப் பிரஜை என தெரியவந்துள்ளது.

இந்த நபர் நேற்று (26) மாலை 04.15 மணிளவில் மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து சிறிலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL-315 ரக விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்தார்.

அவரிடமிருந்து 02 கிலோ 832 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த போதைப்பொருள் தொகை கொழும்பின் பம்பலப்பிட்டி பகுதியில் உள்ள ஹோட்டலில் உள்ளூர் போதைப்பொருள் முகவர்களிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டிருந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட இந்தியப் பிரஜை இன்று (27) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தடுப்பு காவல் உத்தரவு பெறப்படவுள்ளது.

Related posts

முன்னாள் ஜனாதிபதி ரணில் தொடர்பில் கருத்துக்கள் வெளியிட்ட டாக்டர் ருக்‌ஷான் பெல்லன – விசாரணை ஆரம்பம்

editor

ஞானசார தேரருக்கு பிடியாணை

100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை – பலத்த காற்றும் வீசக்கூடும்

editor