விளையாட்டு

விமானத்துடன் மாயமான கால்பந்து வீரரின் சடலம் கண்டெடுப்பு

அர்ஜென்டினாவைச் சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் எமிலியானோ சலா. பிரான்சின் நான்டஸ் அணிக்காக விளையாடி வந்த இவரை, வேல்ஸ் நாட்டின் கார்டிப் கிளப் அணி சமீபத்தில் வாங்கியது. கடந்த ஜனவரி 19 அன்று  கார்டிப் நகரில் இதற்கான ஒப்பந்தத்தில் எமிலியானோ கையெழுத்திட்டார். பின்னர் பிரான்ஸ் திரும்பிய எமிலியானோ சலா, ஜனவரி 21 மாலை ஒரு தனியார் விமானத்தில் பயணம் செய்துகொண்டிருந்தார்.

சானல் தீவுகளுக்கு அருகே திடீரென அவரது விமானம் மாயமானது. விமானத்தில் பயணம் செய்த எமிலியானோ மற்றும் பைலட் குறித்து எந்த தகவலும் இல்லாமல் இருந்தது. இதனையடுத்து போலீசார் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் கடந்த ஞாயிறு காலை மாயமான விமானம் விபத்துக்குள்ளானது என கண்டறிந்தனர். இந்த விமானத்தின் இடிபாடுகளில் சிக்கி இருந்த சடலம் திங்கள் அன்று மீட்கப்பட்டது.  இதையடுத்து நேற்று சடலத்தினை பரிசோதனைக்கு உட்படுத்தியபோது , அது எலிமியானோ சலா என்பது உறுதி செய்யப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

 

 

 

Related posts

32 அணிகளுடன் 2022 உலகக் கிண்ண உதைபந்தாட்டத் தொடர்?

இலங்கை அணியின் தலைவரை மாற்றுமாறு கோரி கிரிக்கட் நிறுவனத்துக்கு அவசர கடிதம்

இலங்கை Vs இங்கிலாந்து: போட்டி அட்டவணை