உள்நாடு

விமானத்தில் உயிரிழந்தவர்களின் பிரேத பரிசோதனைகள் இன்று

(UTV|கொழும்பு) – நேற்று(13) திடீரென கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட லயன் எயார் (Lion Air) விமானத்தில் உயிரிழந்த இருவரின் சடலங்கள் மீதான பிரேத பரிசோதனைகள் இன்று(14) முன்னெடுக்கப்படவுள்ளன.

உயிரிழந்தவர்களின் உறவினர்கள் இன்று இலங்கைக்கு வருகை தரவுள்ளதுடன், அதன் பின்னரே பிரேத பரிசோதனைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நீர்கொழும்பு வைத்தியசாலையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உயிரிழந்தவர்களின் உறவினர்கள் நாட்டிற்கு வருகை தந்ததன் பின்னரே, சம்பவம் தொடர்பில் அடுத்தகட்ட நடவடிக்கைககளை மேற்கொள்ள முடியும் என இலங்கைக்கான இந்தோனேஷிய தூதரகம் அறிவித்துள்ளது.

Related posts

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து – ஒருவர் பலி – 07 பேர் காயம்

editor

40,000 ஆசிரியர் வெற்றிடங்கள் – பிரதமர் ஹரிணி வௌியிட்ட தகவல்

editor

சாரதி அனுமதிப் பத்திரங்களில் புதிய மாற்றம்