உள்நாடு

விமானங்கள் இயக்கப்படாது – ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விசேட அறிவிப்பு

இன்று (21) இரவு 20:40 மணிக்கு புறப்பட திட்டமிடப்பட்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் UL 503 (கொழும்பு முதல் இலண்டன்) மற்றும் UL 504 (​இலண்டன் முதல் கொழும்பு) ஆகிய விமானங்கள் இயக்கப்படாது என்று ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.

இலண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையம் மின்சாரத் தடை மற்றும் தீ விபத்து காரணமாக முழு நாளும் மூடப்பட்டுள்ளதால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தை குறைக்க மாற்று ஏற்பாடுகள் குறித்து விரைவில் அறிவிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் குறிப்பிட்டுள்ளது.

Related posts

அரச உத்தியோகத்தர்களின் ஓய்வு பெறும் வயது தொடர்பான சுற்றுநிருபம் வெளியானது

இரண்டாவது பயணிகள் விமானம் ஜப்பான் நோக்கி பயணித்தது

பகலில் சஜித் – இரவில் ரணில் கள்ள உறவுள்ள SJB : ஹிருனிக்கா சாடல்