சூடான செய்திகள் 1

விமலுக்கு எதிரான முறைப்பாடு பொலிஸ்மா அதிபருக்கு

(UTV|COLOMBO) பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தனக்கு எதிராக முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் பொய்யானது என்றும், அது தொடர்பில் தான் மற்றும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் இணைந்து குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யவுள்ளதாக முன்னாள் அமைச்சரும் இந்நாள் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் தனது டுவிட்டர் தளத்தில் முன்னர் அறிவித்திருந்த பதிவு திருத்தப்பட்டு மீளவும் பதிவொன்றினை பதிவிட்டுள்ளார்.

அதில், ” குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தில் அல்ல பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு அளிக்கவுள்ளோம்..” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

வோர்ட் பிளேஸ் வீதிக்கு தற்காலிகமாக பூட்டு

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இந்தியப் பிரதமர் இலங்கைக்கு விஜயம்

எதிர்க்கட்சித் தலைவரிடம் அறிக்கை கையளிப்பு