உள்நாடுபிராந்தியம்

விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிள் – இளைஞனும், யுவதியும் பலி!

ஹொரணை – மொரகஹேன வீதியில் கனன்வில பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் லொறி ஒன்றும் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

மொரகஹஹேன, பெரெகெட்டிய பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய பெண்ணும் 24 வயதுடைய ஆணுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

வளைவொன்றில் செல்லும் போது மோட்டார் சைக்கிள் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்துள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் லொறியில் மோதுண்ட நிலையில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.

Related posts

பண்டாரவளை ஹோட்டல் அறையில் பெண்ணின் சடலம் : தலைமறைவாகிய சந்தேக நபர்

விமானத்தில் உயிரிழந்தவர்களின் பிரேத பரிசோதனைகள் இன்று

கிரிக்கெட் வீரர் லஹிரு வைத்தியசாலையில்!