அரசியல்உள்நாடு

விபத்தில் உயிரிழந்த பிக்குகளின் பூதவுடல்களுக்கு சஜித் இறுதி அஞ்சலி செலுத்தினார்

அண்மையில் குருணாகல், மெல்சிறிபுர நா உயன, ஆரண்ய சேனாசனவில் மடங்களுக்கு இடையே பயணித்த கேபிள் கார் உடைந்து வீழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த ஏழு பிக்குகள் உயிரிழந்தனர்.

மேலும் சில பிக்குகள் காயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இத்துயர் சம்பவத்தில் உயிரிழந்த பிக்குகளின் பூதவுடல்கள் மெல்சிரிபுர நா உயன ஆரண்ய சேனாசனத்தில் வைக்கப்பட்டுள்ளன. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (27) காலை இப்பூதவுடல்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.

இங்கு இறுதி அஞ்சலி செலுத்தியதன் பிற்பாடு, இந்த விபத்து குறித்து மேலும் அறிந்து கொள்ள, ஆரண்ய சேனாசனத்தின் சங்கைக்குரிய தலைமை தேரரைச் சந்தித்து கலந்துரையாடினார்.

Related posts

சாமர சம்பத் எம்.பிக்கு விளக்கமறியல்

editor

கொழும்பில் மற்றுமொரு பகுதி விடுவிக்கப்பட்டது

மீள திறக்கப்படவுள்ள களனி பல்கலைக்கழகம்!