கேளிக்கை

விண்ணைத்தாண்டி வருவாயா – 2 கௌதம் மேனனின் திட்டம்

(UTV|கொழும்பு)- சமூக வலைத்தளத்தில் ரசிகர்களிடம் பேசிய இயக்குனர் கௌதம் மேனன், சிம்பு சரி சொன்னால் விண்ணைத்தாண்டி வருவாயா 2 உருவாகும் என்று கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தில் சிம்பு திரிஷா நடித்திருந்தார்கள். மேலும் சமந்தா இப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இப்படம் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பு பெற்றது.

இப்படம் வெளியாகி 10 வருடங்கள் கடந்து விட்டது.

இந்நிலையில், இயக்குனர் கௌதம் மேனனிடம் சமூக வலைத்தளத்தில் ரசிகர் ஒருவர் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் 2ம் பாகம் வருமா என்று கேட்டார்.

இதற்கு கௌதம் மேனன், சிம்பு தலையாட்டினால் விண்ணைத்தாண்டி வருவாயா 2ம் பாகம் உருவாகும் என்று கூறியிருக்கிறார்.

Related posts

புருவ புயல் பிரியா வாரியர் மீது அடுத்தடுத்து வழக்குகள் பதிவு

இணையதளம் தொடங்கிய தீபிகா

பிரபல பாடகி காலமானார்