வகைப்படுத்தப்படாத

விடுமுறையில் இருக்கும் மருத்துவ அதிகாரிகள் அனைவரும் சேவைக்கு சமூகமளிக்குமாறு கோரிக்கை

(UDHAYAM, COLOMBO) – இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அனர்த்த நிலையை கருத்தில்கொண்டு விடுமுறையில் இருக்கும் மருத்துவ அதிகாரிகள் அனைவரும் சேவைக்கு சமூகமளிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் தமது உறுப்பினர்களிடம் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் விசேட மருத்துவ முகாம்களை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் இணைப்பாளர் நளிந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக நூற்றுக்கும் அதிகமான அரச மருத்துவ அதிகாரிகள், சேவையில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஏற்கனவே களுத்துறை மாவட்டத்தில் சில மருத்துவ குழுக்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், மாத்தறை, ஹம்பந்தோட்டை மற்றும் காலி மாவட்டங்களுக்கு குழுக்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் நலிந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

நீர்கொழும்பு மாநகர சபை தேர்தலில் போட்டியிடும் மக்கள் காங்கிரஸின் வேட்பாளர்களுடனான சந்திப்பு- (படங்கள்)

தொடரூந்து தொழிற்சங்க நடவடிக்கை 5 ஆவது நாளாகவும்

பாகிஸ்தானில் ஏராளமான சிறுவர்கள் HIV தொற்றுக்குள்ளாகி இருப்பது கண்டுறியப்பட்டுள்ளது